
யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்திலுள்ள 5 சந்தி பிரிவு பகுதியில் நேற்று (10) 3000 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ரூ. 10 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

