நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்

ஜம்மு, காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நடுநிலையான விசாரணைக்குத் தாம் தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு இது தொடர்பில் உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘சமீபத்தில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் மற்றொரு உதாரணமாகும்.

இவ்வாறான விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என ஷெபாஸ் ஷெரீஃப் கூறினார்.

எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )