உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இன்று தபால் மூல வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இன்று தபால் மூல வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றைய தினமும் இடம்பெறவுள்ளன.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்காக 663,499 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 648,490 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கடந்த 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

குறித்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )