
குளத்தில் மூழ்கி ஒருவர் பலி
அனுராதபுரம் – நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்வெவ குளத்தில் நேற்று (22) குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு நொச்சியாகம வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நொச்சியாகம, கட்டுபத்பெத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

