
மீண்டும் குறைந்த தங்க விலை
இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இரண்டாவது தடவையாக பாரிய சரிவைக் கண்டுள்ளது.
இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 5000 ரூபாயால் குறைக்கப்பட்டு 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4600 ரூபாயால் குறைக்கப்பட்டு 335,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

