
அமெரிக்க மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை
அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை, ஹோர்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை, வளைகுடா பிராந்திய அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான டெஹ்ரான் முயற்சியாகவும் கருதப்படுகிறது.
திங்கட்கிழமை காலை Islamic Republic of Iran Broadcasting மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஈரானிய தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (22) அதிகாலை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

