
பொகவந்தலாவையில் சவப்பெட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிர்க்கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் வழக்கு தாக்கல் செய்தமை தொடர்பில் பொகவந்தலாவை நகரில் நேற்று (16) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சவப்பெட்டி ஏந்தி ஊர்வலவமாக வந்த மக்கள் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் இருந்து சவப்பெட்டியை ஏந்தியவாறு பொகவந்தலாவை, செல்வகந்த சந்திவரை பேரணியாக சென்று உருவ பொம்மையினை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர்.





CATEGORIES Sri Lanka

