தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், 25 மற்றும் 28 ஆம் திகதிகளிலும் இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இதுவரை சுமார் 90 சதவீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )