பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

பாணந்துறையிலுள்ள ஹிரணை பகுதியில் நேற்று (28) இரவு குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, ஹிரணை மேற்கு மாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர், மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹிரணை பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )