குஜராத்- ஐதராபாத் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை

குஜராத்- ஐதராபாத் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மொத்தமுள்ள 70 லீக்கில் இதுவரை 50 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனால் எந்த அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) இன்னும் உறுதி செய்யவில்லை.

ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் ஆடுகின்றன. இதில் அதிகாரபூர்வமாக ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவை.

குறைந்தது 8 வெற்றியாவது பெற வேண்டும். தற்போது லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்குவதால், இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் முக்கியத்துவம் பெறும்.

இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மேதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )