
மது அருந்திய குற்றச்சாட்டில் ”யாழ் தேவி’ ரயில் நடத்துனர் கைது
இன்று மதியம் அனுராதபுரத்தில் கடமையில் இருக்கும்போது யாழ் தேவி ரயிலின் தலைமை ரயில் நடத்துனர் மது அருந்திய குற்றச்சாட்டில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் பயணித்த ரயில், பிற்பகல் 2.40அளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்தபோது மது அருந்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
தலைமையில் குறித்த நபர் அனுராதபுரம் போலீசாரிடம் ஆஜர்படுத்தப்பட்டு, நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து யாழ் தேவி ரயில் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு மற்றொரு நடத்துனரின் கொண்டு வரப்பட்டது.
CATEGORIES Sri Lanka

