
ஸ்குவிட் கேம் சீசன் -3 வெளியான புதிய அப்டேட்
2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கியுள்ளார்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. அதனை தொடர்ந்து இதன் 2-வது சீசன் கடந்த டிசெம்பர் மாதம் வெளியானது.
இதனையடுத்து, இந்த தொடரின் 3-வது சீசன் வரும் ஜூன் மாதம் 27-ம் திகதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (06) இதன் டீசர் வெளியாகவுள்ளது.
Smile, we have something special for you. Squid Game Season 3 Teaser tomorrow. ???? pic.twitter.com/V0lGCHaUcq
— Netflix (@netflix) May 4, 2025
CATEGORIES Cinema

