சில அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

சில அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கு நாளைய தினம் (07) கடமை விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து அரச நிறுவனங்களதும் நியதிச்சட்ட சபைகளதும் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றறிக்கையொன்றை வௌியிட்டு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, 2025.05.06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்கெண்ணும், தேர்தல் முடிவுகளை அட்டவணைப்படுத்தும், குறித்த பணிகளில் உதவிச் சேவைகளை வழங்கும் கடமைகளில் ஈடுபட்டு அதற்கான வரவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )