இந்தியாவை தாக்கினோம்                                       – பாகிஸ்தான்                                            அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன – இந்தியா

இந்தியாவை தாக்கினோம் – பாகிஸ்தான் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன – இந்தியா

இந்தியா, பாகிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து ,பாகிஸ்தான் இந்தியாவின் பல மாநிலங்களில்
பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவிற்குள் “பல முக்கிய இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணு ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

இந்தியாவின் “தொடர்ச்சியான தூண்டுதலுக்கு” பதிலடியாகவே இந்த “பதிலடித் தாக்குதல்கள்” மேற்கொள்ளப்படுவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகள் மூலம் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய இந்திய மாநிலங்களிலும், இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரிலும் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் உட்பட 25 க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளதாக பாகிஸ்தானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவம் தனது எக்ஸ் X பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது .

இந்தியாவின் மேற்கு எல்லைகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடி பொருட்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும், அவை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் “உடனடியாக தாக்கி அழிக்கப்பட்டன” என்றும் இந்திய ராணுவம் திட்டவட்டமாக தனது x பதிவில் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )