பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட  பிரதமர்

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

மே 11 ஆம் திகதி அதிகாலை கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கரண்டியெல்ல பகுதியில் சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை நேரில் கண்டறிய மே 11 ஆம் திகதி பிற்பகல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தார்.

image

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் குறித்து பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

இது மிகவும் துன்பகரமான நிகழ்வு. இது போன்ற விடயங்களைத் தாங்கிகொள்வது மிகவும் கடினமானதாகும். சிறுவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்திருப்பது வேதனையானது. எமது நாட்டில் தினமும் ஏராளமான போக்குவரத்து விபத்துகள் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க எமது போக்குவரத்து அமைச்சர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

image
image

இந்த நேரத்தில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்துவருகின்ற எமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அதுபோன்று தங்கள் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்த அனைவரையும், அந்த மனிதாபிமானப் பணியை முன்னெடுத்த அனைவரையும் நான் நினைவுகூர விரும்புகிறேன்.

இதுதான் எமது நாட்டின் தனித்துவம். இந்த மனித பண்புகளை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த நேரத்தில், அரசாங்கம் முடியுமான அனைத்தையும் செய்வதை உறுதி செய்வதற்காக நாங்கள் தலையிடுகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )