
IPL போட்டிகள் மீண்டும் தொடங்கும்
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் திகதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் என கூறப்படுகிறது.
ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும். இதில் எதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறாது.
ப்ளே ஆஃப் சுற்று விவரங்கள்:
குவாலிபையர் 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
குவாலிபையர் 2 – ஜூன் 1
இறுதிப் போட்டி – ஜூன் 3 ஆம் திகதி முறையே நடக்க உள்ளது.

