நாளை புட்டினுக்காக காத்திருப்பேன்

நாளை புட்டினுக்காக காத்திருப்பேன்

துருக்கியில் நாளை (15) ரஷ்ய ஜனாதிபதி புட்டினை சந்திப்பதற்காக காத்திருப்பேன் என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முன்பு நேற்றுமுன்தினம் (12) தொடங்கி 30 நாட்களுக்கு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை ரஷ்யா ஏற்க வேண்டும் என்று உக்ரைன் கோரியது. ஆனால் ரஷ்யா இந்த திட்டத்தை நிராகரித்து நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறுகையில்,

‘ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று நான் இன்னும் நம்புகிறேன். நாளை மறுதினம் துருக்கியில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்காக தனிப்பட்ட முறையில் காத்திருப்போம்’ என்று கூறியிருக்கிறார்.

இதேவேளை நாளை (15) துருக்கியில் உக்ரைன் ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா ஜனாதிபதி புட்டின் செல்வாரா என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )