டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்

தானசாலைகளின் பின்னரான காலப்பகுதியில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

விசாக பூரணையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தானசாலைகள் நடத்தப்பட்ட பின்னர், வீசப்படும் கழிவுகளால் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் உள்ளதால், தானசாலைகளை ஏற்பாடு செய்தவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். 

இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )