
நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும்.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது கருது தெரிவித்த அவர்,
‘எங்கள் பெருமை மிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம்” என தெரிவித்துள்ளார்

