துஷிதவை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு!

துஷிதவை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு!

கொழும்பு நாராஹென்பிட கிரிமன்டல மாவத்தை பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷித ஹல்லோலுவ படுகாயமடைந்துள்ளார்.

அடையாளம் தெரியாத 2 நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரிடம் இருந்த முக்கியமான ஆவணங்கள் சிலவற்றையும் துப்பாக்கிதாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரின் வழக்கறிஞரும் காயமடைந்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கிரீஸ் நாட்டில் பாரிய முதலீடு செய்துள்ளதாக சர்ச்சைக்குறிய கருத்தை துசித ஹல்லொலுவ அண்மையில் வெளியிட்டிருந்ததுடன், இந்த கருத்து தொடர்டபாக கடந்த 15 ஆம் திகதி அவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )