இலங்கைக்கான அமெரிக்க தூதரின் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்குகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதரின் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்குகள்

 இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்கின் பெயரில்    போலி   சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம்  அவதானித்துள்ளது.

இலங்கைக்கான  அமெரிக்கத் தூதரகத்தின்  உத்தியோகபூர்வ கணக்குகளைப் பயன்படுத்துபவர்கள் மற்றும்   இலங்கைக்கான  அமெரிக்க தூதர் ஜூலி சங்கைப் பின்தொடர்பவர்கள், தூதரகத்தையோ அல்லது அதன் அதிகாரிகளையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எந்தவொரு கணக்கின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்குமாறும் ஆள்மாறாட்டம் செய்பவர்களின்  சுயவிபரங்களை நம்புவதை தவிர்க்குமாறும் இலங்கைக்கான  அமெரிக்கத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.   

இலங்கைக்கான  அமெரிக்கத் தூதரகத்தின்  மிகவும் துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவல்களைப் பெறுவதற்கு , போலிகளைத் தவிர்த்து, நேரடியாக உத்தியோகபூர்வ கணக்குகளைப்பின்தொடர்வதற்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://lk.usembassy.gov/ ஐப் பார்வையிட்டு சரிபார்க்கப்பட்ட தூதரக சமூக ஊடக கணக்குகளை மட்டும் பின்தொடரவும்.

இதேவேளை  இலங்கைக்கான  அமெரிக்கத் தூதரகத்தின்   சமூகஊடகத்தளத்தினையும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்கின்  சமூகஊடகத்தளத்தினைப் பின்பற்றுவதற்கு கீழ்வரும் சமூக ஊடக கணக்குகளை மட்டும் பின்தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Ambassador Chung on X: @USAmbSL

U.S. Embassy Sri Lanka on X: @USEmbSL

U.S. Embassy Sri Lanka on Instagram: @USEmbSL

U.S. Embassy Sri Lanka on Facebook: http://facebook.com/Colombo.USEmbassy

 இதேவேளை Facebook, Instagram அல்லது Telegram இல்  இலங்கைக்கான  அமெரிக்க தூதரின்  சுயவிவரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க விசா சேவைகள் தொடர்பாக சமூக ஊடகத் தளங்கள் அல்லது நேரடி செய்தி மூலம் தனிநபர்களைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )