கனமழை எச்சரிக்கை அறிவிப்பு நாளை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது

கனமழை எச்சரிக்கை அறிவிப்பு நாளை பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது

நாட்டின் தென்மேற்கின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது .

நாளை பிற்பகல் 2.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )