பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர சாதாரண தர அழகியல் நடைமுறை பரீட்சை மற்றும் அறநெறி பாடசாலையின் இறுதித் சான்றிதழ் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள் ஒரே நாளில் வழங்கப்பட்டிருக்கும் மாணவர்கள் தமக்கான திகதியை மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இந்த விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.

ஒரு மாணவர் ஒரே நாளில் இரண்டு தேர்வுககளுக்கும் முகம்கொடுக்க வேண்டியேற்பட்டால் , அவர்கள் க.பொ.த. சாதாரண தர நடைமுறைப் பரீட்சைகளுக்கு வேறொரு திகதியை பெற்றுக்கொள்ளமுடியும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறநெறி பாடசாலையின் இறுதித் சான்றிதழ் பரீட்சை அனுமதி படிவம் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர சாதாரண தர அழகியல் நடைமுறை பரீட்சை அனுமதி படிவம் ஆகியவற்றின் நகலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி வலய அழகியல் கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )