
சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை
இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும், சிறுவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவதால் கவனக்குறைவு, தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இந்தத் தீர்மானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதேபோன்று ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளப் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத் தடை சட்டம் தொடர்பான ஆலோசனைகள் கடந்த மாதம் தொடங்கியுள்ளன என்றும், விரைவில் அதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

