சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

2025 ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை 13,41,953 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் (2,74,919) சேர்ந்தவர்களெனவும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் கணிசமான எண்ணிக்கையில் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் 27 நாட்களில் 1,73,909 பேர் நாட்டுக்கு வந்துள்ளனர், இதில் ஜூலை 26 அன்று மாத்திரம் 7,579 பேர் வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )