
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒருவர் கைது
ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிஸாரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடமிருந்து 24 கிராம் 300 மில்லிகிராம் அளவிலான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இன்று (23) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்கரை வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

