
மஹிந்தவை சந்தித்த மலிங்க !
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பு தொடர்பில் லசித் மலிங்க தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“2009இல் மீண்டும் விளையாட்டுத் துறைக்குத் திரும்புவதற்கு நீங்கள் எனக்கு உற்சாகம் அளித்தீர்கள்,
அதனால் மேலும் பதினொரு ஆண்டுகள் நாட்டுக்கு வெற்றிகளைக் கொண்டு வர முடிந்தது.
எப்படியும், எப்போதும், மஹிந்த ராஜபக்சவே “என லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

