
வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற ரணிலின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக , மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் அவர் நேற்றிரவு புதிய மகசின் சிறைச்சாலைக்கு சிறைச்சாலை, பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.

