அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று (22) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

‘ஸ்பொட் டெண்டர்கள்’ முறையின் கீழ் அதிக விலையில் மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம், இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, குறித்த இருவருக்கும் எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )