பஸ் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால் ‘1955’ இற்கு அழையுங்கள்

பஸ் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால் ‘1955’ இற்கு அழையுங்கள்

நிர்ணயிக்கப்பட்ட பயணக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் காணப்பட்டால், அது குறித்து ‘1955’ என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் இருக்கக்கூடும் என்றும், அத்தகைய பஸ்கள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அவ்வாறு முறையான அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பஸ்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியதாக அவர் கூறினார்.

அந்த பஸ்கள் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )