
புத்தளம் – மொனராகலை பிரதான வீதியில் பஸ் – லொறி விபத்துபலர் காயம்
புத்தளம் – மொனராகலை பிரதான வீதி பதினொன்றாவது தூண் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் , லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் பலத்த காயமடைந்து புத்தள பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
மேலும், பஸ்ஸில் பயணித்த பலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

