மூன்று தொகுதி அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிநிலைகளிலிருந்து விலகியுள்ளனர்

மூன்று தொகுதி அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிநிலைகளிலிருந்து விலகியுள்ளனர்

ரஞ்சித் அலுவிஹார, வசந்த அளுவிஹார, சம்பிகா விஜேரத்ன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிநிலைகளிலிருந்து விலகியுள்ளனர்

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை பிரதான அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அளுவிஹார, ரத்தோட்டை தொகுதி அமைப்பாளராக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அளுவிஹார, மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் மாகாண அமைச்சர் சம்பிக விஜேரத்ன ஆகிய மூவரும் அந்த பதவிகளிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தரணியும் முன்னாள் மாகாண அமைச்சருமான சம்பிக விஜேரத்ன, தம்புள்ளை தேர்தல் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானங்களின் போது கட்சி ,தலைமையின் ஒருதலைப்பட்ச அணுகுமுறையின் காரணமாக தாம் அதிருப்தியுற்றதாக தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிப்பதாக விஜேரத்ன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )