
150 ரூபாய் மொத்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட உப்பை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானம்
நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டின் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கிலோ ஒன்று 150 ரூபாய் மொத்த விலையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜூன் 10 ஆம் திகதிக்குள் 30,000 மெட்ரிக் டன் உப்பு நாட்டிற்கு கொண்டுவரப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார்.
இயந்திரமயமாக்கப்பட்ட புதிய முறைகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் இலங்கையில் உப்பு உற்பத்தி செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
CATEGORIES Sri Lanka

