புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு அபராதம்

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு அபராதம்

சிங்கப்பூரீல் புறாக்களுக்கு உணவளித்த ஷியாமலா என்ற மூதாட்டிக்கு அந் நாடு அபராதம் விதித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷியாமலா புறாக்களுக்கு உணவு வழங்கி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அப்போது அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறாமல் வனவிலங்குகளுக்கு உணவு அழிப்பது சட்டவிரோதம் என்று அவரிடம் தெரிவித்த அதிகாரிகள் புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் பிறகும், 2024 நவம்பர் வரை ஷியாமலா பலமுறை புறாக்களுக்கு உணவளித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஷியாமலா தனது வீட்டிற்கு அருகில் புறாவை பிடிக்க முயற்சி செய்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவு அளித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

பறவை, விலங்குகளுக்கு வனவிலங்கு மேலாண்மை துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று உணவளிக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டம் கூறுவதால் ஷியாமலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )