
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் (30) நிறைவடையவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 2025 ஜூன் 2 முதல் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், ”அன்றைய தினம் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமை தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட காலகட்டத்தில் ஒருநாள் சேவையின் கீழ் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
தலைமை அலுவலகத்தில் சாதாரண சேவைகளின் கீழ் விண்ணப்பங்களும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
பிராந்திய அலுவலகங்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாதாரண மற்றும் ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறும்.”என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

