
நேற்று சோதனை செய்யப்பட்ட 28,669 பேரில் பலர் கைது
நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் ,குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக 1,006 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய விசேட சோதனை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,669
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,006
குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 31
பிடியாணையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 378
திறந்த பிடியாணையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 223
மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63
அஜாக்கிரதையாக வாகனம் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20
பிற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4364

