
பஸ்ஸின் டயரில் சிக்கி மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு
பணத்துறை ருக்கஹா பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட 3 சிறுவன் முச்சக்கர வண்டிக்கு முன்னால் பயணித்தபஸ் டயரில் சிக்கி உயிரிழந்துள்ளார்
நேற்று பிற்பகல் 1:30 அளவில் ஒரு பெண் , 10 வயது பெண் குழந்தை மற்றும் குறித்த 3 வயது ஆகியோர் விஹாரையொன்றில் இடம்பெற்ற சிறுவனின் உறவினரின் மகளின் காதுகுத்து நிகழ்விற்கு செல்லும் போதே இந்த விபத்து சம்பவம் இடப்பெற்றுள்ளது
இதன்போது முச்சக்கர வண்டிக்கு முன்னாள் பயணித்த பஸ் ஒன்று பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்ட போது குறித்த முச்சக்கர வண்டிக்கு பின்னால் வந்த லொறி ஒன்று பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது .
அப்போது முச்சக்கர வண்டி ஓட்டுநர் பிரேக்கை இயக்கியபோது முச்சக்கர வண்டியிலிருந்து 3 வயது சிறுவன் தூக்கிவீசப்பட்டுள்ளார்
சம்பவத்தை அறியாத பஸ் சாரதி பயணிகளை ஏற்றிய பிறகு நிறுத்தப்பட்ட பஸ்ஸை இயக்கியுள்ளார்
இதன் போது சிறுவன் பஸ்ஸின் டயரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பானந்துறை அருஹட FONSEKA மாவத்தையை சேர்ந்த நிதூஷ என்ற 3 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

