
மாத்தறையில் ரயில் மோதி ஒருவர் பலி
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூபே ரயில் மார்க்கத்திற்கு அருகில், ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த நபர் உடனடியாக மாத்தறை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹாமுவத்த பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

