பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள்

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள்

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவிக்கும் ரூபாய் 1,440 பெறுமதியான நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதன்படி, தலா ரூபாய் 720 பெறுமதியான இரண்டு பெறுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் தமது விருப்பத்திற்கேற்ப அணையாடைகளை கொள்வனவு செய்யும் வகையில், பல விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன:

தலா ரூ.120 பெறுமதியான 08 அணையாடைகள் கொண்ட 12 தொகுப்புகள் அல்லது தலா ரூ.180 பெறுமதியான 10 அணையாடைகள் கொண்ட 08 தொகுப்புகள்

இந்த திட்டத்தின் மூலம், மாணவிகளின் சுகாதாரத் தேவைகள் வருடம் முழுவதும் பூர்த்தி செய்யப்படும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )