இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தியது.

இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துடன் பலர் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

இந் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் மட்டும் 685 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் கேரளாவில் 1,336 பேரும், மராட்டியத்தில் 467 பேரும், டெல்லியில் 375 பேரும், குஜராத்தில் 265 பேரும், கர்நாடகாவில் பேரும் 234, மேற்கு வங்காளத்தில் 205 பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும், மற்றும் உத்தரபிரதேசத்தில் 117 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )