நைஜீரியாவில் பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் பலி

நைஜீரியாவில் பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் பலி

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்தில் சிக்கியது. இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து சாரதியின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துககளினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )