பஞ்சாப் – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

பஞ்சாப் – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் திகதி தொடங்கியது.

குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகின்றது.

அகமதாபாத்தில் இன்று (01) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )