சுகாதார அமைச்சருக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார அமைச்சருக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று முன்தினம் (30) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.

ரஷ்ய சுகாதார அமைச்சர் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தர ஆர்வமாக உள்ளதாக ஜகாரியன் இதன்போது கூறினார். சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

ரஷ்ய தூதர் இதன்போது மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களை வலுப்படுத்த ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.

நாட்டில் மக்களுக்கு உகந்த சுகாதார சேவையை உருவாக்குதல், வீண்விரயம், மோசடி மற்றும் ஊழல் இல்லாதது மற்றும் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி நகர்த்தும் அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு ரஷ்ய அரசாங்கத்தின் பாராட்டுகளை தூதர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )