
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
மாரவில பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாரவில , கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தையில் இந்த கொலைச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் .
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

