பேலியகொடையில் துப்பாக்கி சூடு

பேலியகொடையில் துப்பாக்கி சூடு

பேலியகொடை இன்று (19) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பேலியகொடையில் ஞானரதன மாவத்தைப் பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )