கொவிட், டெங்கு, சிக்குன்யா, இன்ஃப்ளூவென்ஸா தொற்றுக்களை தடுக்க அரசாங்கம் தயார் நிலையில்

கொவிட், டெங்கு, சிக்குன்யா, இன்ஃப்ளூவென்ஸா தொற்றுக்களை தடுக்க அரசாங்கம் தயார் நிலையில்

டெங்கு, சிக்குன்குன்யா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் ஆகிய தொற்றுகள் இலங்கையில் பரவும் அபாயங்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவு தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் பல நாடுகளில் கொவிட் மீண்டும் பரவி வரும் பின்னணியில், இலங்கையிலும் இந்த வைரஸ் வகை கண்டறியப்பட்டது ,

எனினும் இதற்கு நாட்டில் உரிய முன்னெச்சரிக்கை மாற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதனடிப்படையில் இந்த பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் கொவிட் நோயாளிகள் பதிவாகும் வீதம் 7.7% ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் சுகாதாரப் பிரிவு, கொவிட் பரவலுக்கு ஏற்றவாறு பதிலளிக்க தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )