கடந்த மாதம் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

கடந்த மாதம் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

மே மாதத்தில் மாத்திரம் சுமார் 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரையிலும் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,029,803 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இருப்பினும், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )