
பெங்களூருவில் RCB வெற்றி கொண்டாட்டத்தில் 10 பேர் பலி கூட்ட நெரிசலில் சிக்கி 25ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்
25 ற்கு அதிகமானவர்கள் காயமததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால முதல் வெற்றியின் மகத்தான வெற்றியையும் வெற்றி பெற்ற அணியையும் வெற்றி கோப்பையையும் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி ஸ்டேடியம் அருகே குவிந்தனர்.
எனினும் அனுமதிச்சீட்டு இன்றி பல ரசிகர்கள் நுழைய முற்பட்டதால், நுழைவாயிலில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் 5,000 போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட போதும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர்
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்

