
அதிகரித்துவரும் விவாகரத்துக்களால் நாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரிப்பு
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதாக களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனோஷா எதிரிசிங்க தெரிவித்தார்.
இலங்கையில், விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகின்றமையால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப்படையில் ,பெண்களின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துவது, அவர்களின் குடும்பங்களின் நல்வாழ்விற்கும் பரந்த சமூகத்திற்கும் அத்தியாவசியமானது என்றும் இதன்போது சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனோஷா எதிரிசிங்க வலியுறுத்தினார்.
எனவே, பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசரத் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கையும் களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனோஷா எதிரிசிங்க சுட்டிக்காட்டினார்.

