
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது !
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் 5 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று காலையுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவ இரசாயனவியலாளர்கள் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தொடர்ந்து அந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் கூடிய நிறைவுகாண் மருத்துவ நிபுணர் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நிறைவுகாண் மருத்துவத் தொழிற்சங்கங்கள் ஒன்றிய செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

